தழும்புகள் பருக்கள் ஒரே வாரத்தில் மறைய.. இந்த ஒரு க்ரீமை முகத்தில் தடவுங்கள்!!

0
88
Scars and pimples disappear within a week.. Apply this cream on your face!!

முகத்தில் பருக்கள்,தழும்புகள்,கரும்புள்ளிகள் இருந்தால் அவை அழகை கெடுத்துவிடும்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:

1)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
2)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

கற்றாழை மடலில் இருந்து தோலை நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.இந்த ஜெல்லை தண்ணீரில் போட்டு இரண்டு அல்லது மூன்று முறை அலசி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.

பிறகு முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.இந்த பேஸ்ட் முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு,தழும்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)முட்டையின் வெள்ளைக்கரு – ஒன்று
2)தயிர் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு முட்டையை உடைத்து அதன் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து முகத்தை வாஷ் செய்தால் கரும்புள்ளிகள்,தழும்புகள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

1)குப்பைமேனி பொடி
2)ரோஸ் வாட்டர்

செய்முறை:

ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை வெயிலில் காயவைத்து கொள்ளவும்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேமித்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு குப்பைமேனி இலை பொடி சேர்த்து ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.இதை முகம் முழுவதும் பூசி 20 நிமிடங்களுக்கு உலர விடவும்.பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை வாஷ் செய்ய வேண்டும்.இதுபோல் தினமும் முகத்திற்கு இருமுறை குப்பைமேனி க்ரீம் அப்ளை செய்து வந்தால் ஒரே வாரத்தில் தழும்புகள்,பருக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.