Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதுகலைப் மாணவர்களுக்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

2020 – 2021.ஆம் கல்வி ஆண்டில் முதுகலை மாணவர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுகலைப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகை பெற கேட் தேர்வில் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம்.

மேலும், மாணவர்கள் முழுநேர முதுகலைப் படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். பகுதிநேரப் படிப்பு படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற முடியாது. படிப்பு முடியும்வரை அல்லது 24 மாதங்கள் என எது சீக்கிரம் வருகிறதோ அதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

ஓபிசி க்ரீமிலேயர் பிரிவின் கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. மற்ற பிரிவினருக்கு உரியச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் உதவித்தொகை அளிக்கப்படும்

https://portal.aicte-india.org/partnerportal_nv_enu/start.swe?SWECmd=GotoView&SWEBHWND=&SWEView=AICTE3+Student+ID+Verification+View&SRN=&SWEHo=portal.aicte-india.org&SWETS=1600580564

Exit mobile version