Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Scholarships from Rs.75,000 to Rs.1,25,00 for school students!! Do this to apply right away!!

Scholarships from Rs.75,000 to Rs.1,25,00 for school students!! Do this to apply right away!!

Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் உடைய ஸ்காலர்ஷிப் திட்டமானது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு தேவையான தகுதிகள் :-

✓ OBC/EBC/DNT ஆகிய பிரிவுகளை சேர்ந்தவராக இருத்தல் அவசியம்.
✓ குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
✓ மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் உயர் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

✓ கட்டாயமாக அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயில்பவர்களுக்கு மட்டுமே இந்த திட்டமானது பொருந்தும் என்றும் தனியார் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு இந்த திட்டமானது பொருந்தாது என்றும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

✓ 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு ஆண்டு உதவித் தொகையாக 75,000 ரூபாய் அதிகபட்சமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சமாக 1,25,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ இந்த தொகையானது மாணவ மாணவியருடைய கல்வி மற்றும் விடுதி போன்ற செலவுகளுக்கு ஒதுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :-

✓ முதலில் https://scholarships.gov.in/ என்ற ஆன்லைன் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
✓ new registration என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
✓ ஒருவேளை ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்து இருந்தால் fresh application என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
✓ அதற்குள் சென்று தங்களுடைய விவரங்களை உள்நுழைக்க வேண்டும்.

அதன் பிறகு தேர்வு ஒன்று அறிவிக்கப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு உதவித்தொகையானது வழங்கப்படும் என PM YASASVI Scholarship திட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளது. எனவே திட்டத்தில் பயன்பெற நினைக்கும் மாணவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து அதன் பின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுதல் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Exit mobile version