இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த சில தினகளாக அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.நேற்று சேலம் ,ஈரோடு ,கோவை ,நீலகிரி, நாகை போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை விடிய விடிய பெய்தது .மேலும் இன்று கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விடுமுறை எனவும் அறிவித்துள்ளார்.இந்நிலையில் நாகை மாவட்டத்தில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. ஒருசில தினங்களுக்கு மழை காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.