Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!!

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!!

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியைவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் கதறி அழுது கொண்டே நான் சாகபோகிறேன், தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று கண்ணீர் விட்டு பேசியது உலகம் முழுவதும் பரவி பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அந்த சிறுவன் உருவ வளர்ச்சி இல்லாமல் வித்தியாசமான நோயால் தாக்கப்பட்டு தலை மட்டும் பெரியதாகவும், கை,கால் உடல்கள் சிறியதாகவும் இருப்பதை அவரது பள்ளி நண்பர்கள் தொடர்ந்து கேலி செய்து வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குவாடன் தற்கொலை செய்துகொள்வதாக கதறி அழுதார். இதனைப்பார்த்த சமூக வலைதளவாசிகள் குவாடனுக்கு உலகம் முழுவதும் ஆதரவளித்து அவருக்கு ஊக்கம் தரும் விதமாக ஆதரவளித்தனர்.

இதனையடுத்து குவாடனுக்காக அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் உருவாக்கிய பக்கத்தின் மூலம் 4 லட்சத்து 75 அமெரிக்க டாலர் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் ரூபாய் 3 கோடியே 40 லட்சம் ஆகும். இந்த நிதியின் மூலம் குவாடனையும் அவரது தாயையும் டிஸ்னிலேண்ட் அனுப்புவதற்காக திட்டமிட்டனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இதை குவாடனின் தாயார் மறுக்கும் விதமாக நாங்கள் எங்கும் செல்ல விரும்பவில்லை என்றும், இந்த பணம் அதிகம் தேவையான தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க இருப்பதாக ஆச்சர்யமான பதிலை கூறியுள்ளார். குவாடன் உருவத்தில் சிறியவர் என்றாலும் அவரது குடும்பத்தினரின் உள்ளம் மிகப்பெரியதாகவே உள்ளது.

Exit mobile version