பள்ளி கல்லூரிகள் திறப்பு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்!

0
106

பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் முதல் செயல்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் இணையதளத்திலேயே பாடம் கற்று வருகிறார்கள். இதன் காரணமாக, செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, பள்ளி கல்லூரிகளில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற சுகாதார பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், முன்னுரிமை வழங்கி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் 90 .11 சதவீத ஆசிரியர்களுக்கு நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு இருக்கிறது. அதே போல எல்லா மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை கல்லூரி ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பணி மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறைந்தபட்ச தவணையாக ஒரு தவணை ஆவது நோய் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.