Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு! காதலால் நேர்ந்த சோக சம்பவம் 

Tiruppur

Tiruppur

பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு! காதலால் நேர்ந்த சோக சம்பவம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தபெண் ஆனந்தி(17) இவர் , கடந்த சில காலங்களாக ஒருவரை வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் இந்த செயல் அவரது வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. அவரின் பெற்றோர் அறிவுரைகள் கூறி அவரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நீட்தேர்வு போட்டி மையத்தில் சேர்ந்து பயிலுமாறு கூறினார்.

மாணவியும் கடந்த இரண்டு மாதங்களாக தேர்வு மையத்தில் பயின்று வந்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் காதலன் மாணவியை பயிற்சி மையத்தில் வந்து சந்தித்து பேசியுள்ளார்.

இதனை அறிந்து கோபம் கொண்ட ஆனந்தியின் தந்தை பயிற்சி மையத்திற்கு உடனே விரைந்து சென்று மாணவியை அனைவரின் முன்னிலையிலும் தகாத வார்த்தைகளால் கண்டித்து உள்ளார். தந்தையின் இச்செயலால் மனம் உடைந்த மாணவி உடனே மடியின் மேல் இருந்து கீழே குதித்து உள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த மாணவியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனால். மாணவியின் உறவினர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

Exit mobile version