Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

school-girl-suicide-again-in-kallakurichi-district-shocking-information-that-came-out

school-girl-suicide-again-in-kallakurichi-district-shocking-information-that-came-out

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே வட தொரசலூர் கோவிந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரத்தின் மகள் பிரேமா (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டிற்கு அவரது உறவினராக திருக்கோவிலூர் பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் அவரின் மகன் விஜய் அவ்வப்போது அவரத்தின்  வீட்டிற்கு வந்து செல்வார். அதனையடுத்து விஜய்க்கும் மாணவி பிரேமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர்.

இதனை  அறிந்த பிரேமாவின் தந்தை சேகர் இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த விசாரணைக்கு வந்த விஜயின் தந்தை கோவிந்தன் சேகர் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தார். அதனால் சேகரும் சமாதானம் அடைந்தார். ஆனால் சக்திவேல் மனைவி அலமேலு தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று  முன்தினம் மாலை பிரேமாவின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சக்திவேல் அவரது மனைவி அலமேலு மற்றும் அவர்களின் மகன் வல்லரசாகியோர் சேகர் வீட்டிற்கு வந்து அப்போது வீட்டில் இருந்த பிரேமாவை திட்டி உள்ளனர்.அதனால் மனம்முடைந்த   மாணவி பிரேமா வீட்டின் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்நேரத்தில்  வீட்டிற்கு வந்த சேகர் பிரேமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து சேகர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விஜய், சக்திவேல் ,அலமேலு ,வல்லரசு ஆகிய நான்கு பேரின் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version