Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மாணவி தற்கொலை! ஈரோட்டில் பரபரப்பு!

School girl suicide! Sensation in Erode!

School girl suicide! Sensation in Erode!

பள்ளி மாணவி தற்கொலை! ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் சிலாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகள் கோபிகா(15) இவர் கொங்கர்பாளையம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோபிகா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அதனால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். அதனால் கோபிகா கடந்த 17ஆம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனை அறிந்த கோபிகாவின் பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version