மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு
இயற்கை பேரிடர்களில் காற்றினால் ஏற்படும் பாதிப்பு மிக முக்கிய இடத்தில் உள்ளது. மனிதன் வாழ்க்கையில் மிகவும் அவசியமானது காற்று. ஆக்சிஜன் இல்லை என்றால் மனிதன் வாழ்க்கையே கேள்விக்குறிஆகிவிடும். மனிதன் நடவடிக்கையால் வெளிவர கூடிய தூசுகள் புகை மற்றும் திடமான துகள் அதிக அளவில் சேர்வதால் காற்று மாசு அடைகிறது.
மேலும் மின்சார உலைகள் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் இருந்து வெளியேறும் புகை சாம்பல் அதிக அளவு சேர்வதால் வளிமண்டலம் அதிகம் மாசு அடைகிறது. இது மட்டும் இன்றி அதிக காடுகள் அழிப்பு காரணமாக காற்று அதிகம் மாசு அடைகிறது.
காற்று மாசுப்பட்டால் அதிக பிரச்சனைகள் இன்று உணரப்படுகின்றன. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் சுவாசம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
அதிகம் நகர் பகுதியில் உள்ள மக்கள் இந்த காற்று மாசுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று தரகுறியீடு அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சியில் அதிக அளவு காற்று மாசுபடும் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது . தீபாவளியின் போது அதிக மாசு அடைந்த நகரமாக டெல்லி கண்டறியப்பட்டது.
இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10 வரிசையில் இடம் பெற்றுள்ளது. டெல்லி மருத்துவமனையின் தலைவர் மற்றும் டாக்டரான அரவிந்த் குமார் கூறியதாவது மருத்துவமனை வரும் மக்கள் கண்கள் வறண்டு காணப்படுகிறது , கண் எரிச்சல் ,மூக்கு எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக கூறினார்.
மேலும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ள நிலையில், டெல்லியில் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் பள்ளிகள் திறப்பது தள்ளி போடுவது பற்றி டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சரக்கு லாரிகளும் தடைசெய்யப்பட்டுள்ளது.