பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைப்பு! ஆலோசனை கூட்டத்தின் முடிவு என்ன?

0
143
School opening date postponed! What is the outcome of the consultation meeting?

பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைப்பு! ஆலோசனை கூட்டத்தின் முடிவு என்ன?

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. பள்ளி கல்லூரிகள் திறக்க நேரிட்டால் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க நேரிடும். அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்தனர். அவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை பயின்று வந்தனர். தற்பொழுது தொற்றானது கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதேபோல 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதனையடுத்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முதல்வருடன் பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அவ்வாறு அறிவிப்பு வெளியிட்ட உடன் மக்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.

தீபாவளி பண்டிகை கழித்துதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் ,அறிவித்த தேதியிலேயே பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்தார். தற்பொழுது நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளி பண்டிகை நாள் மக்கள் துணி கடை என ஆரம்பித்து அனைத்து முக்கிய இடங்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதும். தற்பொழுது தொற்றின் பாதிப்பு குறைந்த நிலையில் இவ்வாறு கூட்டம் கூடினால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

அதனால் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து நாளை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. அது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறுகின்றனர்.