ஜூலை 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

0
94

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு இருந்தாலும், மக்கள் பொதுஇடங்களில் கூட்டமாக சுற்றி திரிந்தனர். அதன் பின் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை அடுத்து சற்றே கொரோனா வைரஸ் தொற்றானது குறைந்தது. கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கமானது குறைந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூலை 25 முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் அறிவித்து உள்ளார்.

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியது, இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அதை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால், தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து தமிழகத்தில் எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.