Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்!

டெல்லியில் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அந்த பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாப்ரோலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விக்ராந்த் சிங். இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆசிரியர்கள் அறையில் இருந்தபோது ஒரு இரும்பு கம்பி உடன் வந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியரை அதே இடத்தில் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.

இதனால் தற்போது அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த மாணவனுக்கு வயது இருபத்தி ஒன்றாகும். அவன் ஏற்கனவே பலமுறை தேர்வில் தோல்வி அடைந்த மாணவன். வகுப்பறையில் அவனை ஒழுங்காக அமர சொன்னதன் காரணமாகவும், ஆசிரியர் அவனை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

அதன் காரணமாக ஆசிரியரை அந்த மாணவன் தாக்கி இருக்கலாம் என்றும் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு பிறகு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

மாணவனை ஆசிரியர் அடித்த காலம் எங்கோ போய் மாணவர்கள் கையில் ஆயுதங்களை எடுக்கும் கொடுமையான பல சம்பவங்களும், குருவை மதிப்போடு வணங்க வேண்டிய குழந்தைகள்  அவர்களை பகை உணர்வோடு பார்க்கும் பல சம்பவங்கள் பல நடந்தேறி வருகின்றன. இந்த தவறுகள் சீக்கிரம் மறைய வேண்டும்.

மேலும் அடிபட்ட ஆசிரியரை மற்ற ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

Exit mobile version