Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் குறும்புத்தனம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் இணைந்து மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தன்னை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதுடன் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் மாணவர் புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மாணவர் கொடுத்த புகாரின் பெயரில் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version