Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவி கற்பழிப்பு! போக்சோவில் குற்றவாளி கைது!!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பள்ளி மாணவி கற்பழிப்பு! போக்சோவில் குற்றவாளி கைது!!

தமிழகத்தில் பெண்களை ஏமாற்றும் வித்தையில் குளிர்பான பார்முலாவும் ஒன்று. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் ஒருவர் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுத்து கற்பழித்து சம்பவத்தைப் போல் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் பள்ளி மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவியிடம் பெற்றோர்கள் இதுகுறித்து விசாரித்தபோது; 11 ஆம் வகுப்பு விடுமுறை நாட்களில் மாணவியின் வீட்டு அருகே இருந்த ராஜ்குமார் என்பவர், மாணவியிடம் சகஜமாக பழகுவது போல் திட்டமிட்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். மேலும் மாணவியை பலமுறை மிரட்டி கற்பழித்துள்ளார்.

இதனையடுத்து, கீரனூர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவியை கற்பழித்த ராஜ்குமார் உடனடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
வெளி உலகம் தெரியாது எல்லோரையும் நம்பிவிடும் மாணவிகள், சமூகத்தில் இருக்கும் விரோதிகள் யார் என்பதை அறியாமல் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது.

Exit mobile version