Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யுடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளி மாணவன்… குடித்த நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சனை

யுடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளி மாணவன்… குடித்த நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சனை

கேரளாவைச் சேர்ந்த பள்ளி சிறுவன், யூடியூப் பார்த்து மது கிளாஸ் தயாரித்ததால் சிக்கலில் சிக்கியுள்ளார்.

12 வயது சிறுவன் ஒருவன் யூடியூப் வீடியோ ஒன்றிலிருந்து திராட்சை ஒயின் தயாரிக்க முயற்சித்ததாகவும், அதை தனது நண்பருக்கு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்துள்ளது, கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுபற்றிய விசாரணையில், சம்மந்தப்பட்ட மாணவர் பெற்றோர் வாங்கிய திராட்சையை பயன்படுத்தி மது தயாரித்ததை ஒப்புக்கொண்டுள்ளான். மதுவை தயாரித்து பாட்டிலில் நிரப்பி மண்ணில் புதைத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து தோண்டி எடுத்துள்ளார். அவர் பள்ளிக்கு கொண்டு வந்த மது பாட்டிலில் இருந்து மது மாதிரிகளை சேகரித்த போலீசார், உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுவில் ஸ்பிரிட் அல்லது வேறு ஏதேனும் மதுபானம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஏதாவது இருப்பது கண்டறியப்பட்டால், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி மேலும் கூறினார். மேலும் சிறுவனின் பெற்றோர் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கு அவனது செயலால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version