Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

#image_title

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்.

இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான சண்முகவேல் குடும்பத்தினர் அருகே உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் அவர் உடலை பரிசோதித்துவிட்டு சண்முகவேல் உயிர் பிரிந்து விட்டது என்று கூறினார்கள். இதை கேட்ட அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மகனின் இறப்பை தாங்க முடியாத தந்தை அருள்குமார் தனது மகனின் இறப்பில் ஏதோ சந்தேகம் இருப்பதாக அருகில் உள்ள காடுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து காவலர்கள் இதை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது எங்கு பார்த்தாலும் மாணவர்கள் தற்கொலை நாட்டில் துயரத்தை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

Exit mobile version