Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகிழ்ச்சியில் மிதக்கும் பள்ளி மாணவர்கள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவித்த சூப்பர் குட் நியூஸ்!!

School students floating in happiness!! Super good news announced by the Department of Education!!

School students floating in happiness!! Super good news announced by the Department of Education!!

School Students: பள்ளி கல்வித்துறை மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து செயல்களும் மிக சிறப்பாக நம் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்களின் கலை திறமையை வெளிப்படுத்த கலைத்திருவிழா போட்டி கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு சான்றிதழ் தரப்பட்டது. மேலும் இந்த கலை திருவிழா மாநில அளவில் நடைபெறவுள்ளது. அதில்  1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் டிசம்பர்-3 ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் டிசம்பர் 4 அன்றும், 9முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி, முதல் 25 இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா அழைத்து செல்லப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Exit mobile version