Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவை அருகே சூலூரில் இரண்டு விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகள் மாயம்

கோவை அருகே சூலூரில் இரண்டு விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகள் மாயம்

கோவை: கோவையை அடுத்த சூலூரில் விமானப்படை விமானத்தளம் இயங்கி வருகிறது.இங்கு உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகள் மற்றும் வெளியில் இருந்தும் ஏராளமான மாணவர்,மாணவியர் கற்கின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கேடல் மற்றும் வருன் இருவரும் விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகள் ஆவர். இந்த இருவரும் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பி புறப்பட்டு பின் வகுப்பு செல்லாமல் வெளியில் சென்றுள்ளனர்.

வெகு நேரமாகியும் பிள்ளைகள் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அருகே உள்ள சூலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க இரண்டு பிள்ளைகளையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த இருவரின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் காணாமல் போன மாணவர்களை கண்டு பிடிக்க விமானப்படை விமானத்தளம் மூலமாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தகவல்: ஜெயக்குமார்,கோவை

Exit mobile version