பகுதிநேர ஆசிரியர் சம்பளம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறவிப்பு!

0
175

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் அரசு ஆசிரியர்களுக்கு மட்டும் மாத சம்பளம் வழங்கப்பட்டது. பகுதிநேர ஆசிரியர்கள் சம்பளம் குறித்து ஆலோசனைக்கு பின்னர் நல்ல முடிவை பள்ளிக் கல்வித்துனை வெளியிட்டுள்ளது.

பகுதி நேரமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஜீன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதேவேளையில் ஜீன் மாதம் பணிபுரியாத நாட்களுக்கு பின்னர் பணியாற்ற வேண்டும் என்கிற நிபந்தனையும் விதித்துள்ளனர். கடந்த ஜீன் 8 ஆம் தேதி முதல் தான் பணிபுரியும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.