உலகம் முழுவதும் கொரோனாவால் தினறி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்றளவும் வரை கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. இதில் பல மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவும் ,தனது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையிலும் உள்ளன.
இச்சூழ்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் உள்ள மாணவன் அங்குள்ள மிகவும் பிரபலமான பள்ளியில் படித்து வருகிறான். அந்த மாணவனின் தந்தை அங்கு உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்தசூழலில் அந்த மாணவனின் குடும்பத்திலும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களிடமும் கல்விக் கட்டண தொகையை செலுத்துமாறு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளது.தனது குடும்ப நிலையை அறிந்து பள்ளி கட்டண தொகையை செலுத்த இயலாத நிலையை அறிந்து மன உளைச்சல் அடைந்த அந்த மாணவன் எப்படியாவது கல்வி கட்டண தொகையை செலுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நண்பர்கள் 4 பேரூடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான்.
இதன்படி அந்த மாணவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து பால்வந்த் என்கிளேவ் என்ற நகரில் வசித்து வரும் தொழிலதிபர் ஒருவரின் பணவரவினை அறிந்து அவரிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான். பின்பு அந்த தொழிலதிபர் தனது பணம் ரூ.5.34 லட்சத்தை டெபாசிட் செய்ய சென்ற போது துப்பாக்கி முனையில் தொழிலதிபரிடம் இருந்து ரூ5.34 லட்ச ரூபாயை கொள்ளையடித்தனர் அந்த ஐந்து பேர் கொண்ட மாணவர் குழுவினர்.
இதனால் போலீசாரிடம் தொழிலதிபர் கூறிய புகாரின் அடிப்டையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் பள்ளி மாணவர்கள் 5 பேர் கொண்ட குழு என்பது தெரிய வந்தது.பிறகு அந்த ஐந்து மாணவர்களையும் கைது செய்தனர்.
எந்த சூழ்நிலையிலும் தனது கல்வியை இழந்து விடக்கூடாது என்பதற்காக திருட்டில் ஈடுபட்டு கல்விக் கட்டண தொகையை செலுத்த தவறான வழியினை தேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் போலீசார் மாணவர்களை விசாரித்து வருகின்றனர்.