Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு 38 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பள்ளி மாணவனுக்கு ஆயுள் தண்டனையுடன் 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக் மெக்கென்னி  என்னும் 17 வயது மாணவர் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி டென்வர் வட்டாரப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். சம்பவத்தில் 18 வயது மாணவர் இறந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையில் மெக்கென்னி கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தாம் செய்த குற்றத்திற்கு மனம் வருந்துவதாகவும் தமக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மெக்கென்னி 40 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பரோலில் வெளிவர முடியும். சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த 19 வயது டெவன் எரிக்சன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எரிக்சன் மீதான விசாரணை செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கும். மெக்கென்னி ஒரு திருநங்கை என்பதால் சக மாணவர்கள் அவரைக் கேலி செய்ததாகவும் அதனால் நண்பர் எரிக்சனுடன் இணைந்து துப்பாகிச்சூடு நடத்தியதாகவும் விசாரணையில் அதிகாரிகள் அறிந்தனர். துப்பாகிச்சூட்டின் போது இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தனர். துப்பாகிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் எரிக்சனின் பெற்றோருக்கு சொந்தமானவை.

Exit mobile version