Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

பெங்களூரு பகுதியைச் சேர்ந்த யஸ்வந்தபுரம் பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவரின் மகள் ரம்யா (வயது 15). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு,சிறுமி வகுப்பறையில் நொறுக்கு தீனி சாப்பிட்டுள்ளார்.ரம்யா வகுப்பறையில் தீனி சாப்பிட்டதை ஆசிரியர் பார்த்த நிலையில் ரம்யாவை கண்டித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக ரம்யாவின் மீது பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார் அந்த ஆசிரியர்.பள்ளியின் முதல்வர் ரம்யாவின் தாயை நேரில் அழைத்து இதுதொடர்பாக எச்சரித்துள்ளார்.

பின்பு இதுதொடர்பாக ரம்யாவின் தாயார் பள்ளிக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் அப்பள்ளியின் மீது புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் ரம்யாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

ரம்யா இவர்களின் தொல்லை தாங்க இயலாமல் நேற்றுமுன்தினம் நடைபயிற்சிக்கு செல்வதாக தன் தாயாரிடம் கூறிவிட்டு வெளியேறிய சிறுமி, யஸ்வந்தபுரம் ரயில் நிலையம் அருகே அவ்வழியாக வந்த ஓடும் ரயிலின் மீது பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

அவ்விடத்திற்கு தகவலறிந்து விரைந்த ரயில்வே காவல்துறையினர் ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் தற்கொலை செய்வதற்கு முன் ரம்யா கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.அந்த கடிதத்தில் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் தொல்லையால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version