Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு ஆணுக்காக இரு பள்ளி மாணவிகளிடையே ஏற்பட்ட மோதல்! சினிமாவை மிஞ்சும் அசத்தல் காட்சிகள் வீடியோ வைரல்!

முன்பெல்லாம் பெண்களுக்காக ஆண்கள் தான் அடித்துக்கொள்வார்கள் இதுதான் உலக வழக்கமாகவும், வரலாற்று வழக்கமாக வைத்திருந்தனர் ஆனால் தற்சமயம் அந்த நிகழ்வு அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

பெங்களூருவிலுள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் இரு பிரிவாகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதன்பிறகு சிறிது நேரத்தில் மாணவிகள் கடுமையாக தாக்கி கொள்கிறார்கள்.

அவர்களுடைய கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்வதும், இரும்பு கதவுகளில் தலையைக் கொண்டு சென்று மாத செய்ததும் என சற்றே ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டார்கள் என தெரிகிறது.

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் 2 மாணவிகள் படிக்கட்டில் இருந்து கீழே விழுகிறார்கள். இதில் ஒரு மாணவி இரும்பு ஜன்னலில் வசமாக தள்ளப்படுகிறார்.

இந்த சம்பவத்தால் அவருடைய மூக்கு உடைந்து ரத்தம் கொட்டுகிறது, உச்ச கட்டத்திற்கு செல்லும் சூழ்நிலையில், அங்கிருந்த சில மாணவ, மாணவிகள் மோதல்களை ஒருவழியாக தடுத்து விடுகிறார்கள்.

இந்த மோதலுக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை, இந்த மோதல் விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் எந்தவிதமான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை, யார் மீதும் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.

ஆனாலும் இது தொடர்பாக மாணவ, மாணவிகளிடமிருந்து கிடைத்த தகவலினடிப்படையில் காதலனுக்காக மாணவிகள் மோதி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, மாணவி ஒருவரின் காதலனை மற்றொரு மாணவி வெளியே அழைத்துச்சென்று ஊர் சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் காதலிக்கு தெரிய வந்தவுடன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று தட்டிக்கேட்டு மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவிகள் மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version