Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹரியானா மாநிலத்தில் ஜூலை 27 முதல் பள்ளிகள் திறப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் 25 முதல் அமல்படுத்தப்பட்டு செயல்முறையில் உள்ளது.எனவே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இணைய வசதி இல்லாத மாணவர்களின் நிலை குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக ஜூலை 31 வரை மத்திய அரசு ஓரடங்கை நீட்டித்து ,இரண்டாம் கட்ட தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரிகள் ஜூலை 31 வரை திறக்க கூடாது என்று உத்தரவிட்டது.இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஜூலை 27 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஜூலை 1 முதல் 26 வரை கோடை விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.

மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை திறக்கப்படாது என்றும், பள்ளிகளில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை உயர்த்த கூடாது என்றும் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஹரியானா மாநில பள்ளிக்கல்வித்துறை இதனை வெளியிட்டுள்ளது.மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றம், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் வழங்கப்படுகிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் கல்வி கட்டணங்களை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு உரிமை உள்ளது என்று அறிவித்துள்ளது.

Exit mobile version