1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! வெளிவந்த திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்றானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.தற்போது வரை எல்லையில்லாமல் பரவி கொண்டே உள்ளது.அதனையடுத்து முதல் அலை தீவீரமாக இருந்த சூலில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்தது.அதனையடுத்து சிறிதளவு அதன் தாக்கம் குறையவே மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மீண்டும் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பிக்க தொடங்கியது.நாடு முழுவது இரண்டாவது அலையின் தாக்கம் இந்தளவிற்கு இழப்புக்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.தற்போது அதனையும் கடந்து வந்த போதிலும் மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளது.
ஆனால் இம்முறை அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளது.இந்த அலைகளின் நடுவே மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை.அதுமட்டுமின்றி அவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் எடுக்கப்பட்டது.முந்தைய ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி நமது தமிழ்நாட்டில் ஆள் பாஸ் செய்தனர்.சில மாநிலங்களில் மட்டும் தொற்றையும் மீறி தேர்வு நடத்தப்பட்டது.தற்பொழுது கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்தி வருவதால் முக்கிய துறைகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து மாநிலங்களிலும் திறக்கப்பட்டுள்ளது.குறிப்பாக 9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அதனையடுத்து இதர மாணவர்களுக்கும் பள்ளிக்கு செல்வது குறித்து பல பேச்சு வார்த்தைகள் மாநிலங்களுக்கிடையே நடந்து வருகிறது.அந்தவகையில் ஹரியான மாநிலத்தில் 1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வி மந்திரி கன்வார் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும்.மேலும் பள்ளிக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் கற்காலம் என்றும் கூறினார்.