மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! முதலமைச்சருக்கு பரிந்துரை செய்த பள்ளிக்கல்வித்துறை!

0
114

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன .

இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற காரணத்தால், அதற்கேற்றவாறு ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், திடீரென்று மீண்டும் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது அதோடு புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக, அதிகரிக்க தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து மாநில அரசு மீண்டும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இவ்வாறான சூழ்நிலையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11,12,ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுதொடர்பாக பேட்டியளித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, பொதுத்தேர்வுக்கு முன்பே 2 திருப்புதல் தேர்வுகள் நடத்துவதற்கான திட்டத்தை தீட்டி இருந்தோம் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது 1 திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.