நாளை முதல் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக மக்களை இன்றளவும் பாதித்து வருகிறது.அந்தவகையில் பார்க்கும் பொழுது மக்கள் இன்றளவும் அந்த தொற்றிலிருந்து மீண்டு வர முடியவில்லை.முதல்,இரண்டு என்று பரவல் தாக்கம் வீரியம் அடைந்து கொண்டிருக்கிறதே தவிர குறைந்த பாடு இல்லை.மேலும் தொற்று தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தனர்.அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகள் மூலம் அவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டது.
ஆறு மாதகாலங்கள் ஊரடங்காகவும் அடுத்த ஆறு மாதக்காலம் தளர்வுகளற்ற ஊரடங்காகவும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.மக்கள் இழந்த வாழ்வாதாரத்தை மீண்டும் பெறுவதற்கு அனைத்து அரசாங்கமும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதனையடுத்து தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று மூன்றாவது அலை தொடரப்படும் என்று கூறினாலும்,அதன் தாக்கம் பெருமளவு காணப்படாது என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் இன்று கூறியுள்ளார்.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் சில மாநிலங்களில் திறக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஓர் வாரத்திற்குள்ளேயே மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.அதனையடுத்து நாளை ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.மாணவர்கள் பள்ளிக்கு வர முன்பாகவே பல கட்டுப்பாட்டு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதில் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி மாணவர்கள் பள்ளிகள் வருவதற்கு முன்னதாகவே அவர்களுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மேலும்,50% மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.மாணவர்கள் வகுப்பறைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பு போன்றவைகளை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.