பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் இந்த வகை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
மேலும் அந்தந்த மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாரத்தின் இறுதி நாள் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்து அதை அமல்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அந்தந்த மாநிலங்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளன. அந்த வகையில் மஹாராஷ்டிராவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. அதன் காரணமாக மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் மற்ற மாவட்டங்களில் பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டது.
இந்த நிலையில் அங்கு தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு குறையவில்லை என்றாலும் கூட, மும்பையில் இந்த தொற்றின் பாதிப்பு வேகமாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அங்கு தினசரி பாதிப்பு இதற்கு முந்தைய நாட்களை காட்டிலும் குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. எனவே மும்பை உள்ளிட்ட மஹாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 24ம் தேதியே 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என மஹாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.