Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? விளக்கமளித்தார் கல்வியமைச்சர்!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டுத் தேர்வுகள் எதுவும் நடைபெறாததால் இந்த வருடம் நிச்சயமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் முடிவுற்று கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆனால் 10, 11, மற்றும் 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு தற்போது வரையிலும் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.இந்த தேர்வுகள் அனைத்தும் மே மாதம் இறுதியில் முழுமையாக முடிவு வரும் என்று தெரிகிறது.

ஆனால் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி உள்ளிட்ட எண்ணற்ற வேலைகள் இருப்பதால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிச்சயமற்ற இந்த தகவலால் மாணவர்கள் அனைவரும் குழம்பிப் போயிருந்தார்கள். இந்தநிலையில், இன்று காலை 10 மணியளவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் ஆரம்பமாகும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி முதல் பள்ளிகள் ஆரம்பமாகும் . பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி முதல் பள்ளிகள் ஆரம்பமாகும்.

* பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் .தேதியும், பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ம் தேதியும் ஆரம்பமாகும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ம் . தேதி வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

அடுத்த வருடம் பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற விவரம் ஆன்லைனில் வெளியிடப்படும். என்றார்.

Exit mobile version