திருமணத்தின் போது தங்கத்தில் தாலி கட்டுவதற்கான அறிவியல் பூர்வமான காரணம்

0
214

தமிழர்களின் வாழ்வியலில் பயன்படுத்தும் ஒவ்வொரு பழக்க வழக்கமும் ஏதாவது ஒரு வகையில் அறிவியல் சார்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் திருமணத்தின் போது தங்கத்தில் தாலி கட்டுவதற்கான அறிவியல் பூர்வமான காரணம் என்ன என்று பார்க்கலாம்.

பெண்களுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது.இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரிஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலையச் செய்யும். இது பெண்களுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும் ஆண்களுக்கு ஒரு நரம்பு கொண்டவையாகவும் இருக்கும்.இதனாலையே ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஞாபக சக்தி இருக்கிறது.

ஆனால் ஞாபக சக்தி சற்றே ஆண்களுக்கு குறைவாக இருப்பினும் ஒரு முடிவை எடுக்கும் போது எந்தவித குழப்பமும் இல்லாமல் தீர்க்கமாக எடுப்பர்.ஆனால் பெண்கள் இந்த முடிச்சின் காரணமாக ஞாபகசக்தி அதிகமாக இருந்தாலும் ஒரு முடிவு எடுத்தபின் அதிக குழப்ப நிலையில் இருப்பர்.இதனைச் சமன் செய்யவே தங்கத்தில் தாலியை கட்டுகின்றனர். (இதில் தாலி என்பது கொடியை குறிப்பதல்ல.)

ஒவ்வொரு உலோகமும் நமது உடம்பில் உரசும்போது ஒரு வித நற்ப்பயனைத் தருகின்றன.தங்கமும் ஒரு உலோகமாகும்.இந்த தங்கம் மார்பு குழியில் உரசும்போது பெண்களுக்கு ஏற்படும் இந்த குழப்பம் சமன் செய்யப்படும் காரணமாகவே தாலியை தங்கத்திலும் மார்பு குழியில் படும் வகையிலும் கட்டப்படுகிறது.

மூன்று முடிச்சு போடுவதற்கான காரணம் என்னவென்றால் மஞ்சள் கயிற்றை மூன்று முடிச்சு போடுவதால் மட்டுமே நெஞ்சுக்குழியில் உரசும் படி அமையும்.இதனாலேயே அக்கால முன்னோர்கள் கணக்கிட்டு மூன்று முடிச்சு போடும் முறையை கொண்டு வந்தனர்.

இக்கால பெண்கள் சிலர் நாகரிக வளர்ச்சியால் தாலி அணிவதை பெரிதும் விரும்புவதில்லை.இது மூடத்தனம் அல்ல தாலி கட்டுவதிலும் ஒரு அறிவியல் உள்ளது.திருமணமாகும் பெண்கள் கட்டாயமாக தாலி அணிய வேண்டும் இதுவே அந்தக் குடும்பத்திற்கும் பெண்ணிற்கும் நன்மை பயக்கும்.