ஊட்டியில் தோன்றிய வெட்டுக்கிளி – விஞ்ஞானி விளக்கம்

0
110

கடந்த சில தினங்களாக வட மாவட்டங்கள் கிராமத்து வயல்களில் கூட்டம் கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகளால் உணவு பயிர்கள் நாசமாகின. இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் ஊட்டியிலுள்ள காந்தள் எனும் பகுதியில் இது வரை கண்டிராத வெட்டுக்கிளிகள் காணப்பட்டன. இதனால் மக்கள் அச்சமடைய, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த வெட்டுக்கிளியைப் பாட்டிலில் அடைத்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.

அதனை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுப்பி வைத்தார் ஆட்சியர். இதனையடுத்து அந்த வெட்டுக்கிளியையும் காந்தள் பகுதியையும் ஆய்வு செய்த அதிகாரி மற்றும் விஞ்ஞானிகள் அங்கு காணப்பட்ட வெட்டுக்கிளி சிறு கொம்பு வெட்டுக்கிளி என்றும் இது குறித்து விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினர்.

இதனால் அப்பகுதி விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.