விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

0
174
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதி அற்புதமாக திகழும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைக்கரமாகவும் செல்லும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் அருமையாக நிறைவேறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரை திருப்திப்படுத்தி சந்தோஷப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விடுவார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு உற்சாக செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.