விருச்சகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அகலும் நாள்!!

0
123
#image_title

விருச்சகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அகலும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அகலும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தெளிவுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பிரச்சனைகள் இல்லாமல் சுமூகமான பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் வேலைகள் நல்ல வாய்ப்பினை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் நல்ல பெயர் பெறுவார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சிறப்பான சூழ்நிலைகள் அமையும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மகிழ்வார்கள். மாணவ மாணவிகள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்த ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..