அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி திண்டுக்கல் ரோட்டிலுள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று 11ம் வகுப்பு கடைசி தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பகுதியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று மாணவியின் கழுத்து உட்பட 10 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். மாணவி அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் செய்த முதல் கட்ட விசாரணையில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நபர் பொத்தமேட்டுப்பட்டி சார்ந்த கேசவன் என்பவர் என தெரியவந்திருக்கிறது.
கடந்த வருடம் காதல் திருமணம் செய்திருக்கிறார், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரினடிப்படையில் காவல்துறையினர் கேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த நிலையில், சென்றமாதம் சிறையிலிருந்து வெளியே வந்த கேசவன் தற்போது மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.