மீண்டும் சேருவோம் கதறும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா!! முட்டுக்கட்டைப் போட்ட அதிமுக!!

0
679
Screaming OPS and Sasikala will reunite!! AIADMK put a deadlock!!

மீண்டும் சேருவோம் கதறும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா!! முட்டுக்கட்டைப் போட்ட அதிமுக!!

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் படு தோல்வி அடைந்தது.அந்த வகையில் பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனையொட்டி அதிமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரும் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்தனர்.இருப்பினும் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.

இவ்வாறு அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் கட்சிக்காக ஒன்றிணையலாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த வகையில் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை வெற்றியை சரித்திரமாக்க வேண்டும் இதனால் அனைத்தையும் மறந்து ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றினைய வேண்டும்.மீண்டும் கட்சியை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் வழியே சசிகலாவும் தனது அறிக்கையில்,
இந்த இயக்கமானது எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது.இது மிகப்பெரிய வேதனை.இனியும் நான் பொறுமையாக இருந்தால் எம்ஜிஆர் ஜெயலலிதா மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம்.மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சியை கொண்டுவர வேண்டும்.அதனால் இந்த இயக்கம் மூலம் மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.இந்த ஆட்சியை அழிந்து விடக்கூடாது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி கூறிய நிலையில் தற்பொழுது இருவரும் இவ்வாறன தூது அனுப்பியுள்ளனர்.இவர்கள் அனுப்பிய அறிக்கைக்கு அதிமுக பொதுசெயலாளர் கேபி முனுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் கூறுவதாக, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அதிமுக தலைமைச் செயலகத்தில் தாக்குதலை பன்னீர்செல்வம் நடத்தினார்.அதில் பல்வேறு ஆவணங்களையும் திருடி சென்றார்.அதேபோல அம்மா அவர்களை விமர்சனம் செய்த அண்ணாமலையோடு கூட்டணியும் வைத்துள்ளார்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தொண்டர்களை ஒன்று கூட பன்னீர் செல்வதற்கு தகுதி இல்லை.பாஜக அதிமுக என இரண்டும் பிரிந்த நிலையில் இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் போட்டியிட்டுள்ளார்.மேற்கொண்டு எப்படி தொண்டர்களுக்கு மட்டும் தற்பொழுது அழைப்பு விடுக்க முடியும் என்று சரமாரி கேள்விகளை கேட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.இதன் மூலம் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அவர்கள் மீண்டும் கட்சியில் இனைய வாய்ப்பே இல்லை என தெரிகிறது.