Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறப்பு விருந்தினராக சென்ற குக்வித் கோமாலி புகழ்! ஆனா வட போச்சே!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதிலும் பல ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறது இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ஆறு முப்பது மணி அளவில் ஒளிபரப்பப்படுகிறது.

இதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சியின் ஒன்றாவது பகுதி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது ஆனால் அப்பொழுது கூட இந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்களால் கவனிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் புகழ் இவர் தற்சமயம் விஜய் சேதுபதி அருண் விஜய் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

புகழ் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஷிவாங்கி சிவகார்த்திக்கேயனின் டான் திரைப்படத்தில் நடிக்கிறார். அதேபோல தர்ஷா திரெளபதி படத்தின் இயக்குனரின் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.அதேப்போல பவித்ரலட்சுமியும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடிகர் சதீஷ் அவர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இப்படி அவர்கள் எல்லோருமே திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்கள்.அதே சமயத்தில் ரசிகர்களை சந்தோசப் படுத்துவதற்காக அவ்வப்போது கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கேற்று வருகிறார்கள். அந்த வகையில் திருநல்வேலி வண்ணாரப்பேட்டையில் கடைதிறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குக் வித் கோமாளி புகழ் சென்றிருக்கிறார்.

இவர் மிகவும் பிரபலமானவர் என்றபடியால் அவரை பார்ப்பதற்கு அந்த பகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் ஒன்று கூடினார்கள். இதனால் நோய் தடுப்பு விதிமுறைகள் கூட்டத்தில் காணாமல் போயின. இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் கூட்டம் கூடிய காரணத்தால், அந்த கடைக்கு காவல்துறையினர் சீல் வைத்து சென்று விட்டார்கள். அதோடு அந்த கடையின் உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார்கள். அதே சமயத்தில் அங்கு போன சிறப்பு விருந்தினர் புகழ் விருந்தினராகவே சென்றுவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version