ஒரு கை காப்பு-னால் கடைக்கு சீல்!! திருப்பதி மலையில் பரபரப்பு!!

0
138
Seal the shop with a hand-seal!! The excitement in Tirupati Hill!!

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் உள்ள டீ கடையில் டீ வழங்கும் கப்பில் மத அடையாளத்தைக் குறிக்கும்படி இருந்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலையில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதம் சார்ந்த பிரச்சாரம் செய்யும் விதமாக சின்னங்களைக் கொண்டு வரவும் பயன்படுத்தவும் தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

திருப்பதி திருமலையில் பிற மத அடையாளங்களுடன் பொருள் விற்ற கடைக்கு சீல் வைப்பு. இந்த கடையில் கிறிஸ்துவ மதத்தின் சிலுவை அடையாளமாக கை காப்புகள் விற்பனை செய்யப்படத்தாக வந்த புகாரில் அந்த கடையை சோதனை செய்த போது அந்த சிலுவை காப்புகள் கிடைத்தது.

இதே போன்று கடந்த வருடம் 27/06/2023 தேதி  திருப்பதி மலையில் உள்ள டீ கடை ஒன்றில் வழங்கப்பட்ட டீ கப்பில் கிறிஸ்துவ மதத்தின் சிலுவை அடையாளமாக டீ என்ற எழுத்து அச்சிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்பு இது குறித்து தேவஸ்தானத்திலும் பக்தர்கள் சிலர் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி மலையின் மேல் இருக்கும் டீ கடைகளில் ஆய்வு செய்தனர்.

பின்னர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே உள்ள ஒரு டீ கடையில் சிலுவை போன்று டீ அச்சிடப்பட்ட கப்புகளைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கப்புகளைப் பறிமுதல் செய்த தேவஸ்தான அதிகாரிகள் டீ கடைக்கு சீல் வைத்தனர். மேலும் திருப்பதி மலையில் இந்து மதத்தைத் தவிர வேறு மத அடையாளங்கள் இருக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

அதன் பின்பு 1 வருடம் எந்த தவறும் இல்லாமல் இருந்த வந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை வந்ததுள்ளது. மேலும் அங்கு உள்ள கடைகளை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.