Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முட்டி மோதிக்கொள்ளும் சீமான் – திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார்!! என்னதான் பிரச்சனை?

Seaman who knocks - Trichy D.I.G. Varun Kumar!! What is the problem?

Seaman who knocks - Trichy D.I.G. Varun Kumar!! What is the problem?

திருச்சி: தற்போதைய திருச்சி டி.ஐ.ஜி. மற்றும் முன்னாள் எஸ்.பி.,யும் வருண்குமார் அவரது குடும்பத்தினர் பற்றி நாம் தமிழர் கட்சி அவதூறு பேசியதாக அக்கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார் டி.ஐ.ஜி. வருண்குமார் அவர்கள். மேலும் சீமானுக்கு டி.ஐ.ஜி. வருண்குமார் நோட்டீஸ் அனுப்பினர். அதற்க்கு பதில் நோட்டீஸ் சீமான் அதற்கான விளக்கத்தை கொடுத்து அனுப்பினர். ஆனால் டி.ஐ.ஜி. வருண்குமார் கேட்ட கேள்விக்கு சீமான் சரியாக பதில் கூறவில்லை. மேலும் டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி குற்றவியல் கோர்ட்டில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் டி.ஐ.ஜி. வருண்குமார் கூறியது “சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதா ல் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவித்து இருந்தார்.

மேலும் அந்த புகார் நேற்று திருச்சி கோர்ட்டில் டி.ஐ.ஜி. வருண்குமார் நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் திருச்சி கோர்ட்டில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை காவல் சீருடை இல்லாமல் சாதாரணமாக வந்து பதிவு செய்தார்.

மேலும் அவர் கோர்ட்டில் இருந்து வெளியில் வந்து செய்தியாளர்களிடம் கூறியது “சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாடு சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன்; அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன். சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை” என்று வருண்குமார் கூறினார்.

Exit mobile version