Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு! முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

Second round consultation for medical studies! Result Release Date Released!

Second round consultation for medical studies! Result Release Date Released!

மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு! முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.மேலும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 104 எம்பிபிஎஸ் இடங்களும் ,கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் இரண்டு எம்பிபிஎஸ் இடங்களும் காலியாக உள்ளது.மேலும் பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 788 இடங்கள் காலியாக உள்ளது.தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் ,பிடிஎஸ் இடங்களில் 833 இடங்களும் உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 28 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது.மொத்தம் 1700 க்கும் அதிகமான இடங்கள் காலியாக இருகின்றது.காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை அன்று தொடங்கியது.

அவை நாளை மாலை ஐந்து மணி வரையில் இணையவழியில் விருப்பமான இடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.அதற்கான முடிவுகள் வரும் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பற்றி கூடுதல் விவரங்களுக்கு வலைதளங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version