Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலா விடுதலை அணித்தாவும் அமைச்சர்கள்! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு?

கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று இருக்கும் சசிகலா வருகிற 27-ஆம் தேதி விடுதலையாகிறார். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் உடைய செய்திக்குறிப்பு இதுவாகத்தான் இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் பிறகு நான்கு வருட காலம் சிறை தண்டனை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ,சுதாகரன், போன்றோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் நிறைவு பெற இருக்கிறது.

ஆனால் உண்மை என்பது இதற்கு நேர் மாறாக இருக்கின்றது. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகி கர்நாடகாவில் இருக்கின்ற அரசு தங்கும் விடுதியில் தங்க வைக்கப்படுவர் என்று தெரிகிறது. அவர்களை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில முக்கியமான விஷயங்களில் முக்கிய முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த இடத்தில் 20 நாட்களுக்கு மட்டுமே சசிகலாவை பார்ப்பதற்கும், பேசுவதற்கும், மற்றும் உடன் தங்குவதற்கும், மிக முக்கியமான அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகதான் டி.டி.வி தினகரன் சென்ற மூன்று தினங்களுக்கு முன்பாகவே ரகசியமாக டெல்லிக்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலே, சசிகலா விடுதலை ஆகும் நேரத்தில் அவரை சந்திப்பதற்காக 18 க்கும் அதிகமான தற்போதைய அமைச்சர்கள் தயார் நிலையில் இருப்பதாக மத்திய உளவுத்துறை தெரிவித்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்த பட்டியலில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி, சி.வி .சண்முகம் , மணியன் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், உள்பட 18 இருக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இருப்பதாக தெரிவித்திருக்கிறதாம் மத்திய உளவுத்துறை.

ஆனாலும் இவர்கள் எல்லாம் உடனே அவரை சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பு ஒரு சில கடைகளும் தயாராகி வருவதாக கூறுகிறார்கள். இவர்களுடைய சந்திப்பு நிலை இல்லாத நிலையில் இருக்கும் போது அமைச்சர் கடம்பூர் ராஜு ,தங்கமணி, எஸ், பி .வேலுமணி எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஒரு தகவல் டெல்லி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு சசிகலாவை மிக மோசமாக விமர்சனம் செய்த கே. சி. வீரமணி அவரை சந்திப்பதற்கான அனுமதி கிடைக்காது என்ற ஒரு தகவலும் இருக்கின்றது. இதையெல்லாம் தவிர்த்து அவர் சசிகலாவை சந்திப்பதற்கு முயற்சி செய்தாலும், அவர் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே பல துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் சசிகலாவிடம் சரண்டர் ஆவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Exit mobile version