356 வது பிரிவை பயன்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது! அதிமுக ஜெயக்குமார் அதிரடி
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இப்படிபட்ட ஒரு ஊழல் ஆட்சி தேவை தானா என மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் ஆளுநரே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, தமிழ்நாட்டை எப்படி அமைதி பூங்கா என்று சொல்கிறார்கள் அமளி காடாக தான் இருக்கிறது என்று கூறுகிறார், மேலும் கள்ளக்குறிச்சி வன்முறை, கோவை குண்டுவெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களே இதற்குச் சான்று.
எதிர்க்கட்சிகள் சொன்னால் கூட பரவாயில்லை ஆளுநரே கூறியுள்ளார் என்று கூறிய அவர் 356 வது பிரிவை பயன்படுத்தி இந்த விடியா ஆட்சியை கலைக்கக் வேண்டும் என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் கஞ்சா, பிரவுன் சுகர், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக கூறினார். மேலும் மக்கள் மீது கடும் வரி சுமையை இந்த அரசு சுமத்தியுள்ளது. விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, தீவிரவாதமும் தலைத்தூக்கியுள்ளது.
இதற்கு மேலும் இந்த விடியா ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நீடிக்க மக்கள் விரும்பவில்லை இந்த அவல ஆட்சிக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையென்றால் ஆளுநர் தாமாக முன்வந்து 356 வது பிரிவை பயன்படுத்தி இந்த கொடுங்கோல் குடும்ப ஆட்சியை கலைக்கக் வேண்டும் என்று கூறினார்.