கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டபோது முடக்கத்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சூழலில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மூலமாக 2025ம் ஆண்டிற்குள் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
போர் தளவாடங்கள் உற்பத்தி மூலமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அவற்றில் ரூ. 35,000 கோடியை ஏற்றுமதி மூலமாக ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்கு பல்வேறு பரிந்துரைகளை வரைவு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்,2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதார மதிப்பை ரூ. 350 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசின் இலக்கு அடைவதற்கு உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான உச்ச வரம்பை 49 சதவீதமாக இருந்து 74 சதவீதமாக கடந்த மே மாதம் மத்திய அரசு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.