Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்திலேயே சந்தித்து கொள்கிறேன்! பதில் கூறும் அண்ணாமலை

மின்சார வாரியம் சார்ந்த புகார் மனுக்கு மன்னிப்பு கேட்கக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் விவகாரத்துக்கு மன்னிப்பு ஒன்றும் கேட்க முடியாது என்றும், மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அங்கு சந்தித்துக் கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.

மேலும், திருப்பூர் பகுதிகாளில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை தேசிய செயலாளர் அருண் சிங் அவர்கள் , மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் , தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மேல் பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி ஆகியோர் இன்று ஆய்வு செய்து வந்தனர்.

இதன் பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியது என்னவென்றால்: “தமிழகம் முழுவதும் பாஜகவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சிக்கு சொந்தமாக அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை வருகின்ற நவம்பர் மாதம் 10ம் தேதி தேசிய தலைவர் திரு.ஜே.பி. நட்டா அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

மேலும், திருப்பூரில் இருந்து கொண்டே ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் கட்சி அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்க இருக்கிறார்.

Exit mobile version