Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யார்…யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வச்சிக்கட்டும் ! நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் !

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக நாடு முழுவதும் பதாகை ஏந்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்று தமிழக முழுவதும் நடைபெற்றது.சென்னையில் நடைப்பெற்ற போராட்டத்தில் கலந்த கொண்ட பின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சீமான், அந்தி வந்தால் நிலவு வரும்.அதேபோல் இந்தி வந்தால் பிளவு வந்தே தீரும், தற்போது இந்தியை திணிக்க முயற்சி செய்யும் இவர்கள் தமிழ் மொழியை நாடு முழுவதும் செயல்படுத்த முயற்சி செய்வார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப்பொதுத் தேர்தலில் நாம்தமிழர் கட்சி தனித்தே என்று கூறினார்.

கடந்த வருடம் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் நாம் தமிழர் கட்சி தனித்தே நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version