Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள்!!  திமுக  அரசுக்கு சீமான் கண்டனம்!!

Seeman condemned the use of students for electronic measurement of crop cultivation

Seeman condemned the use of students for electronic measurement of crop cultivation

Digital Crop Survey:பயிர் சாகுபடி குறித்து மின்னணு அளவீடு செய்ய மாணவர்களை பயன்படுத்தி  வருவதற்கு  சீமான்   கண்டனம்  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வேளாண் திட்டங்களை மேற்கொள்வதற்காக  அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு தரவுகளையும் மின்னணு அளவீடு முறையில் தொகுத்து  வழங்க  கடந்த 2023 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தது மத்திய அரசு.எனவே    டிஜிட்டல் சர்வே தகவல்களை 2025 ஏப்ரல் மாதத்திற்குள்  மத்திய அரசிடம் தர வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது.

இதனால் அவரச அவரமாக    டிஜிட்டல் சர்வே பணிகளை செய்து வருகிறது. இதற்காக 20,000 மாணவ மற்றும் மாணவியரைக் கட்டாயப்படுத்தி இப் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள்.பொதுவாக பயிர்  டிஜிட்டல் சர்வே ஊராட்சி மன்ற அலுவலர் தான் செய்ய வேண்டும் , ஆனால் அனுபவம் இல்லாத மாணவர்கள் இப்  பணியில் உள்ளார்கள்.

இதனால் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் வேளாண் நிலப்பரப்புகளை நன்கு அறிந்த  ஊராட்சி மன்ற அலுவலர்கள்  இப் பணியில் அமர்த்த வேண்டும். இதற்காக  திமுக அரசு மீது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஒரு வருடத்திற்கு முன்பு  பயிர் சாகுபடி டிஜிட்டல் சர்வே  எடுக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது, அதை அலட்சியப்படுத்திய  திமுக அரசு அவசர அவசரமாக மாணவர்களை அப் பணியை செய்து வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version