அவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!

0
113

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக வந்த தகவல் தொடர்பாக சீமான் பதிலளித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியை 2010ஆம் ஆண்டு தொடங்கிய சீமான், 2016 ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாகவே போட்டியிட்டார். கடலூர் சட்டசபை தொகுதியில் நின்ற அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு வந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதோடு இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றார்.

பீகார் மாநில தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய ஓவைசி கட்சி தமிழக தேர்தலில் களமிறங்க இருக்கின்ற நிலையிலே, சீமானுடைய நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம், ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்யும் சீமான் கமல்ஹாசனை விமர்சித்தது கிடையாது. கமல் கட்சி ஆரம்பித்த போது நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து இருக்கின்றா.ர் இதன்காரணமாக இந்த தகவல் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்றையதினம் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ஓவைசி மீது எனக்கு மதிப்பு இருக்கின்றது, அவ்வளவு தான் நாம் தமிழர் கட்சி ஓவைசி கட்சியுடன் மட்டும் கிடையாது, எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என் கூட யாராவது கூட்டணிக்கு வருவாங்களா சிதறி ஓடி விடுவாங்க அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளர்களை இறுதி செய்து விட்டோம் அவர்களும் தொகுதியில் பணிகளை தொடங்கி விட்டார்கள். என்று தெரிவித்திருக்கின்றார்.

117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள், ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள். என்றும், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், போன்றவர்களை நிறுத்தி தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம். என்று தெரிவித்த அவர், ரஜினியும் கமலும் ஒன்றிணைவது ஆச்சர்யம் கிடையாது இருவரும் நன்றாக தான் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதே போல ஒரு அரசியல் படம் ஒன்றில் ரஜினி கமல் இணைவதால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்தார் சீமான்.