Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!!

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!!

தமிழர்களுக்கு தாய் மொழிப்பற்று, இனப்பற்று அறவே இல்லை. தமிழன் தூய தமிழை பேசாமல் ஆங்கிலமும், தமிழும் கலந்த தங்கிலீஷ் மொழியில் பேசுகிறான், உணவில் கலப்படத்தை விரும்பாத தமிழனுக்கு மொழியில் மட்டும் கலப்படம் எதற்கு..?

தமிழ்நாட்டில் இருக்கும் கடைகளின் பெயர்கள் தமிழில் இருக்கிறதா..? ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறாயே நீ ஆங்கிலேயனா..?  என்று தனது கட்சியின் அரசியல் மேடைகளில் தமிழுக்காக ஆவேசமாக முழங்கியவர் சீமான்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமானின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சீமான் தம்பிகளும் குடும்பத்தாரும் “ஆப்பி பர்த்டே டூ யூ”  என்று ஆங்கிலத்தில் பிறந்தநாளை கொண்டாடினார்கள். கடைசியில் தமிழில் சொல்லுங்கள் என்று சீமான் சொன்ன வீடியோ இணையத்தில் விமர்சனமாகி வருகிறது.

ஊருக்கு மட்டும் உபதேசம், என்பது போல் தமிழ், தமிழன் என்று பொதுவில் பேசிவிட்டு ஆங்கிலத்தில் பிறந்த நாள் கொண்டாடியதை சமூக வலைதளங்களில் சிலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

Exit mobile version