Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார்…” சீமான் பரபரப்பு அறிக்கை

“பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார்…” சீமான் பரபரப்பு அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்று சமூகவலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது இயக்குனர் வெற்றிமாறன் “தொடர்ந்து நம் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. வள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதாகட்டும், ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக மாற்றுவதாகட்டும். நாம் நம் சினிமாவை அரசியல்மயப்படுத்தாவிட்டால், மேலும் நம் அடையாளங்கள் அனைத்தும் பறிக்கப்படும்” என பேசி இருந்தார்.

அவரின் இந்த பேச்சுக்கு வலதுசாரிகள் மற்றும் இந்துத்வாவினரிடம் இருந்து எதிர்ப்பும், தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஆதரவும் குவிந்துள்ளது. முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெற்றிமாறனுக்கு ஆதரவாக அவர் பேசியது சரிதான் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் “தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் அரசியல் களத்தில் செயல்படுவோர் மத்தியில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை பற்றி வெற்றிமாறன் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version