நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!!
நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டை இல்லாமல் சினிமா டயலாக்கை டிக்டாக்கில் பேசுவதுபோல் சீமான் பேசியிருந்தார்.
இணையத்தில் வெளியான வீடியோ குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, சீமான் சிரித்து சமாளித்து மழுப்பினார். செய்தியாளர்களிடம் மழுப்பியதற்கு பதிலடி தரும் வகையில் சீமானை பற்றி மீண்டும் ஒரு வீடியோவை நடிகை வெளியிட்டார். அதில் தன்னைப்பற்றிய தவறான எண்ணம் பரவி இருப்பதாகவும் அது எல்லாமே பொய் என்று நிரூபிக்கவும் நான் தொடர்ந்து பேசுவேன் என்று சீமானை விமர்சனம் செய்துள்ளார்.
இணையத்தில் ஏற்படும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் சீமானும் அவருடைய தம்பிகளும் திணறி வருகின்றனர். விமர்சனங்களை தவிர்க்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் காதலை பற்றிய வீடியோ ஒன்றை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் காதலில் ஒன்றுமில்லை ஆனால், காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமே இல்லை. காதலுக்காக யாரும் சாக கூடாது, அதேபோல் யாரும் காதலிக்காமல் சாக கூடாது என்றும் பேசியுள்ளார்.
தன் மீது எழுந்த அந்தரங்கை சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க சீமான் இதுபோல் பேசுகிறார் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சங்கள் வைக்கப்படுகின்றன. சீமானுக்கு ஆதரவாக இருந்த பலர் தற்போது அவரிடம் இருந்து சற்றே விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இயக்குனர் சேரன் சீமானால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. நடிகை விஜயலட்சுமியால் நாம்தமிழர் கட்சிக்கு வந்திருக்கும் சோதனை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.